கையில் பிடித்தவரை திடீரென கடித்த அனகோண்டா - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
பிரேசில் நாட்டில் வன அதிகாரியை அனகோண்டா பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசிலின் டொகான்டின்ஸ் (Tocantins) என்ற இடத்தில், நீர்த்தேக்கப் பகுதியில் சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள அனகோண்டாவை வன அதிகாரி ஒருவர் பிடிக்க முயன்றார். அப்போது, அவரை அனகோண்டா கடித்தது. அது விஷத்தன்மை கொண்டது இல்லை என்றும், பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.