சத்தமே இல்லாமல் ஆஸ்திரேலியாவில் சம்பவம் செய்த இந்திய பெண்

Update: 2025-08-18 03:46 GMT

ஆஸ்திரேலியன் ஓபன், டேக்வாண்டா சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை ரூபா பாயர் (Rupa Bayor) வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன், டேக்வாண்டா சாம்பியன்ஷிப் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் (Gold Coast) நகரில், கடந்த 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், அருணாசல பிரதேசத்தை சேர்ந்த ரூபா பாயர் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சாதனை படைத்த வீராங்கனைக்கு அருணாசல பிரதேச அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்