போர் பதற்ற சூழலில்.. ஈரானில் இருந்து குரலெழுப்பும் இந்தியர்கள்

Update: 2025-06-16 11:13 GMT

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள், தங்களை உடனடியாக மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரானில் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தங்கியுள்ள

நூற்றுக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள், நிலைமை மோசமடைவதற்குள், தங்களை உடனடியாக மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக தூக்கத்தை தொலைத்ததாகவும், ஈரானில் இருப்பதை பாதுகாப்பாக உணரவில்லை என்றும் இந்திய மாணவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்