அமெரிக்காவுக்கு எதிராக வெடித்த போராட்டம்
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தலைநகர் கராகசில் போராட்டம் நடத்தினர்..
ஜனவரி 3ம் தேதி வெனிசுலாவின் கராகசில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள், அந்நாட்டு அதிபர் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோர்சையும் சிறைபிடித்தன... இந்த சூழலில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுகூடிய மதுரோ ஆதரவாளர்கள் உடனடியாக மதுரோ மற்றும் சிலியாவை விடுவிக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.