America || Protest || லாஸ் ஏஞ்சல்சில் தொடரும் போராட்டம் கார்களுக்கு தீ வைப்பு...

Update: 2025-06-09 04:36 GMT

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்சில் குடியேற்ற அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது முறையான ஆவணங்களின்றி தங்கிய 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாகவும், குடியேற்ற அதிகாரிகளை கண்டித்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 3வது நாளாக தொடரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலையில் ஏராளமான மக்கள் திரண்டு, போலீசாரை கண்டித்தும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்களை கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதனிடையே, போராட்டத்தின்போது கார்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்