லத்தீன் அமெரிக்க கடல் பகுதியில் படகை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கொலம்பியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில், இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் Pete Hegseth அதுகுறித்த காட்சிகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்தப் படகில் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ Gustavo Petro கண்டனம் தெரிவித்துள்ளார்.