அமெரிக்காவின் சிகாகோ நகரில் திராவிட கருத்தரங்கம் நடைபெற்றது. தி.மு.க அயலக அணி உள்பட பல்வேறு அமைப்பினர் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தினர். அயலக திமுக அணி அமைப்பாளர் விஸ்கான்சின் சிவா, துணை அமைப்பாளர் விஜய் சாந்தலிங்கம் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டை செய்தனர். கருத்தரங்கு தொடங்குவதற்கு முன்னதாக பாரம்பரிய வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமெரிக்க வாழ் தமிழர்கள், பறை இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.