பல்வேறு காரணங்களால் விண்ணில் செலுத்துவது தள்ளிப்போன நிலையில், நிசார் செயற்கைக்கோளை ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ மற்றும் நாசா அறிவித்துள்ளது. நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்க இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியால் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. அதிக வெப்பம் அடைவதற்கான அபாயத்தை குறைப்பது உட்பட பல்வேறு காரணங்களால் விண்ணில் செலுத்துவது தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.