மூன்று வருடத்தில் முதல்முறை வீழ்ந்த “ BYD“ லாபம்
சீனாவின் பொருளாதார போரினால், பிரபல “ BYD“ கார் நிறுவனமானத்தில் விற்பனையும், லாபமும், கணிசமாக சரிந்துள்ளது. அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரின் காரணமாகவும், சீனாவில் டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவங்கியதாலும், சினாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான “ BYD“ , தாங்கள் நிர்ணயித்ததை விட 55% சதவீதம் குறைவாக விற்பனை செய்துள்ளது. இதனால் சுமார் 30 சதவிகிதம், அந்நிறுவனத்துக்கு லாபம் குறைந்துள்ளது. “ BYD“ நிறுவனம், அதன் விற்பனையில் சுமார் 80 சதவிகிதத்தை சீனாவில் செய்வது குறிப்பிடத்தக்கது.