திபெத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமயமலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 2.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.