மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்று உணவில்லாமல் தவிக்கும் இருவரை மீட்க கோரி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரங்கநாதன் மற்றும் கடலூரை சேர்ந்த மணி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாலத்தீவிற்கு வேலைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் இருவருக்கும் உணவளிக்காமல், ஊதியம் வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தங்களை ஊருக்கு அனுப்பும்படி கெஞ்சிய நிலையில், மாலத்தீவு நிறுவனம் பாஸ்போர்ட்டை பறித்துவிட்டதாக கூறி, நணபர்கள் உதவியுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை அறிந்த அவர்களின் குடும்பத்தினர், இருவரையும் இந்தியா அழைத்து வரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.