மீன் போல கடலுக்குள் இருந்து வெளியே வந்த யாரென்றே தெரியாத 54 சிறுவர்கள்.. அதிர்ந்த நாடு
கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு சென்ற 54 மொராக்கோ சிறுவர்கள் மீட்பு
மொராக்கோவில் இருந்து, கடலில் நீந்தி ஸ்பெயினுக்கு புலம்பெயர முயன்ற 54 சிறுவர்களை ஸ்பெயின் கடற்படையினர் மீட்டனர்.
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான கியூட்டாவிற்கு புலம் பெயர கடலில் நீந்தியவாரே 54 குழந்தைகளும் 30 பெரியவர்களும் சென்றுள்ளனர். இதனை அறிந்த ஸ்பெயின் கடற்படையினர் பாதுகாப்பு ஏதும் இன்றி ஆபத்தான முறையில் கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் மொராக்கோவை சேர்ந்தவர்கள் எனவும் மீட்க்கப்பட்ட நபர்களுக்கு உணவு தங்குமிடம் தற்காலிகமாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.