இந்தியா மீது 50% வரி.. மெக்ஸிகோ கொடுத்த அதிர்ச்சி

Update: 2025-12-11 14:09 GMT

அமெரிக்காவைத் தொடர்ந்து மெக்சிகோவும் இந்தியா மீது வரி விதித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50 சதவீதம் மெக்சிகோ வரி விதித்துள்ளது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் பாதிக்கப்படவுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்க இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ தரப்பில் கூறப்பட்டாலும், விரைவில் அமெரிக்கா - கனடா- மெக்சிகோவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை திருப்திப்படுத்தவே மெக்சிகோ இவ்வாறு ஆசிய நாடுகள் மீது வரி விதித்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்