துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

Update: 2025-07-29 06:20 GMT

அமெரிக்காவில், நியூயார்க்கின் மத்திய மன்ஹாட்டனில் உள்ள ஒரு வானளாவிய கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நியூயார்க் காவல் துறை அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான ஷேன் தமுரா சம்பவத்திற்குப் பின் தன்னைத் தானே சுட்டு த*கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு துளைக்காத ஆடையை அணிந்து ஏ.ஆர். ரக துப்பாக்கியை பயன்படுத்தி, அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் காவல்துறை அதிகாரி மற்றும் பொதுமக்கள் நால்வர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்