அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 300 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு புறப்பட ரன்வேயில் சென்றபோது எதிர்பாராத விதமாக டெல்டா விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பற்றியது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசர அவசரமாக 300 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.