இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டியில் செப்டம்பர் 30ம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் மோதவுள்ளன. அக்டோபர் 5ம் தேதி கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவிற்கு வர மறுப்பு தெரிவித்து இருப்பதால் அந்த அணியின் போட்டிகள் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன.