Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2025) | 6PM Headlines | Thanthi TV

Update: 2025-10-07 13:19 GMT
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு. இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த 3 ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் சுரங்கப்பாதை, எலக்ட்ரிக் சர்க்யூட்டில் ஆற்றல் அளவீடு கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது...
  • "குற்றம் செய்யவில்லை என்றால் விஜய் தைரியமாக சென்றிருப்பார்" கருர் விவகாரத்தில், குற்றம் செய்யவில்லை என்றால், தைரியமாக தொண்டர்கள் வீடுகளுக்கு சென்று விஜய் ஆறுதல் கூறியிருப்பார்...தன் நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் வெளியில் வர அச்சப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்...
  • கரூர் துயரம் - சிபிஐ விசாரணை கோரிய மனு ஏற்பு. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது....பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனு வருகிற 10ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...கிருஷ்ணகிரி, தர்ம‌புரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்