Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.01.2026) | 6 PM Headlines | ThanthiTV
- கோவை, தேனி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் செவ்வாய்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
- ஓய்வூதிய திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உடனான ஆலோசனைக்கு பின் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....பழைய ஓய்வூதிய திட்டமே தங்களது பிரதான கோரிக்கை என்றும் உறுதிபட கூறியுள்ளனர்...
- தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது...வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது...
- பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய கார், ஜீப், வேன்களின் பாஸ்ட் டாக்குகளுக்கு KYV கிடையாது...தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது....
- ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனையாகிறது...
- வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது....
- ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புறங்களில் தண்ணீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்..இத்திட்டம் குறித்து முதல்வருடன் நேரடி விவாதத்துக்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்...