மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09.08.2025) ThanthiTV

Update: 2025-08-09 11:03 GMT

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

எல்லை தாண்டி வந்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை... 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து விசாரணை..

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக, விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் விளக்கம்.. பாகிஸ்தானின் ஒரு AEW&CS விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியதாக பெருமிதம்...

நாடு முழுவதும், கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத‌ 334 கட்சிகளின் பதிவு நீக்கம்... தமிழ்நாட்டில் 22 கட்சிகளின் பெயர்களை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை...

சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு... நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்...


எம்.ஜி.ஆரை விமர்சித்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்... திருமாவளவனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம்...

ராமதாஸை சுற்றி இருக்கும் சில சுயநலவாதிகள், தீய சக்திகள்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என அன்புமணி விமர்சனம்... பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த தீர்ப்பில் தனக்கு மகிழ்ச்சி இல்லை, வலியோடுதான் அதை பார்த்ததாகவும் பேச்சு...

நான் தூங்கி பல நாட்களாகின்றன, பல பாரங்களை தாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன் என அன்புமணி உருக்கம்.. ஒரு கண் மட்டும் போதும் என்று சொல்வீர்களா?, 2 கண்களும் வேண்டும் என்றும் பேச்சு..

ராமதாஸுக்கு நிரந்தரமான நாற்காலி உள்ளதாக அன்புமணி திட்டவட்டம்... சாமிக்கு நம்மால் முடிந்த வழிபாட்டை செய்கிறோம், ஆனால் பூசாரி தடை செய்கிறார் எனவும் பேச்சு...

சென்னையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் நடந்தது என்ன? இன்று இரவு 8 மணிக்கு தந்தி டிவியில் ஒளிபரப்பு...


நெல்லை, இரும்பு பட்டறைகளில் விவசாய பயன்பாட்டு ஆயுதங்களை தவிர அபாயகர அரிவாள், கத்தி தயாரிக்க தடை.. ஆயுதங்கள் தயாரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை...

சென்னையில் துண்டு போட்டு லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை... அடையாறு மேம்பாலம் அருகே வாகனங்களை நிறுத்தி, எந்த விவரமும் இல்லாத ரசீதை கொடுத்து, லஞ்சம் வாங்கிய நிலையில் அதிரடி...

மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் காதணி விழாவுக்கு வந்தவர்களை விரட்டி விரட்டி கடித்த கதண்டு... 50க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி...

டெல்லி, ஜெய்த்பூரில் சுவர் இடிந்து விழுந்து பயங்கர விபத்து... 2 சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சோகம்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் சந்திப்பை உறுதி செய்த ரஷ்ய அதிபர் மாளிகை... உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, வரும் 15ஆம் தேதி அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பு...

Tags:    

மேலும் செய்திகள்