Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.01.2025) | 1PM Headlines | ThanthiTV
- ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கால்நடைத்துறையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்த பின்னர் முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
- அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்...
- எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்திய பின் அதிமுகவின் 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்...
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண், பெண் இருவருக்கும் கட்டணமில்லா நகர பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார். 100 நாள் வேலைவாய்ப்பு 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
- 5 லட்சம் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கிராம பகுதியில் சொந்த வீடு, நகர பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்திய பின் அதிமுகவின் 5 தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்...
- உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....வாடிவாசலில் இருந்து புயல் வேகத்தில் திமிறி வரும் காளைகளை தீரத்துடன் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் சுற்றிச் சுழன்று வீரர்களை திக்கெட்டும் காளைகள் சிதறடிக்கின்றன.காளையர்களை கலங்கடித்து காளைகள் வாகை சூடி வருகின்றன.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போக்கு காட்டும் காளைகளை அடக்கி காளையர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.திமிலைத் தொட்டுப்பார் என பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டி வீரத்தை நிலைநாட்டி வருகின்றனர்