Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.01.2025) | 1PM Headlines | ThanthiTV
- தமிழகம் முழுவதும் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது....குடும்பத்தோடு புதுப்பானையில் பொங்கல் வைத்து மக்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
- பொங்கல் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்....இனித்திடும் செங்கரும்பை சுவைத்து, செங்கதிரோனை போற்றிடும் தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்...
- சேலம் மாவட்டம் மேச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வைத்து கொண்டாடினார்.விழாவில், ஏராளமானோர் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியை ஈபிஎஸ் பார்த்து ரசித்தார்.
- சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்...விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு... எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்...
- பொங்கல் திருநாளையொட்டி உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.வாடிவாசலில் இருந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் காளைகளை, தீரத்துடன் காளையர்கள் அடக்கி வருகின்றனர்.
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 16 காளைகளைப் பிடித்து மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடத்தில் உள்ளார்...9 காளைகளை பிடித்து அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 2ம் இடத்திலும் 6 காளைகளை பிடித்து சோழவந்தானை சேர்ந்த பிரகாஷ் 3ம் இடத்திலும் உள்ளனர்....