திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சட்டவிரோதமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து இளைஞரின் கை சிதறி துண்டானது. ஈச்சங்கால் பகுதியில் சபரி என்பவர் பட்டாசு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வந்தபோது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிக்குண்டு வெடித்துள்ளது. இதில் சபரியின் இடது கை சிதறியதோடு, உடலிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.