புதுச்சேரியில் தொழிற்சாலை உரிமையாளர் போல் பேசி 5 கோடி மோசடியில் ஈடுபட்ட பங்களாதேஷை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சுவிகியா என்பவரை வாட்சாப்பில் தொடர்புகொண்ட நபர் தொழிற்சாலையின் உரிமையாளர் போல் குறுஞ்செய்தி அனுப்பி அலுவலக வங்கி கணக்கில் இருந்து 5 கோடியே 10 லட்சம் அனுப்புமாறு கேட்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுவிகியா புதுச்சேரி சைபர் பிரிவு போலிசில் புகார் அளித்ததன் பேரில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற போலீசார் மொபிகுல் ஆலம் முலா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 2.3 கோடி பணத்தை மீட்டனர்.