Weave | CM Stalin | ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தை சேலையில் செதுக்கிய சாதனை மனிதர் - பரிசளித்த முதல்வர்
தத்ரூபமான நெசவு பணி - விருது வழங்கி கெளரவித்த தமிழக அரசு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது தத்ரூபமான நெசவுப்பணிக்காக, தமிழக அரசின் சிறந்த நெசவாளருக்கான விருதை பெற்றுள்ளார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை இவர் தத்ரூபமாக நெய்துள்ளார். இவரது இந்த படைப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நெசவாளர்களுக்கான விருது மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.