அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவை சித்தரித்து சோஷியல் மீடியாவில் பரவும் வீடியோ.. பரபரப்பு புகார்
அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாவை சித்தரித்து சோஷியல் மீடியாவில் பரவும் வீடியோ.. பரபரப்பு புகார்
அமைச்சர் சேகர்பாபு - மேயர் பிரியா குறித்து அவதூறு - வழக்குப் பதிவு
அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, 6 இன்ஸ்டாகிராம் ஐடிகள், யூடியூப் சேனல் மீது, 4 பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, புகார்தாரரான தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஐடி விங் என்ற பெயரில் த.வெ.க, நாம் தமிழர் கட்சி, RSS, பாஜக உள்ளிட்ட கட்சியினர், பெண்கள் குறித்து ஆபாசமாக சித்தரித்து பரப்புவதாக வீரலட்சுமி குற்றம்சாட்டினார்.