ரூ.10க்கு விதவிதமா சாப்பாடு- "டேஸ்ட்டு செமயா இருக்கும்"- படையெடுக்கும் மதுரை மக்கள்
ரூ.10க்கு விதவிதமா சாப்பாடு - "டேஸ்ட்டு செமயா இருக்கும் சார்" படையெடுக்கும் மதுரை மக்கள்
மதுரையில் ஒரு இட்லி 2 ரூபாய், பொங்கல் 5 ரூபாய் என மொத்தமே 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் சமூக சேவகர், ஏழை எளிய மக்களின் அட்சய பாத்திரமாக திகழ்கிறார்.
மதுரை B.B.குளம் உழவர் சந்தை அருகே வல்லமை என்ற அறக்கட்டளை பெயரில், மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி 2 ரூபாய், வடை 2 ரூபாய், பொங்கல் 5 ரூபாய் என 10 ரூபாய்க்கு காலை உணவும், மதியம் 10 ரூபாய்க்கு சாதம், சாம்பார், ரசம், கூட்டு பொறியல், சில நாட்களில் கலவை சாதமும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தினந்தோறும் 700 பேருக்கு இங்கு உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.