Vaigai Dam | Rainfall | பயங்கரமாய் சீறி ஓடும் தண்ணீர்.. பாலத்தையே மறைத்த அதிர்ச்சி காட்சி
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணை பூங்காவின் இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. முழு கொள்ளளவை எட்டிய வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணை பூங்காவில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் அடைக்கப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.