Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2026) | 7PM Headlines | Thanthi TV
- பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் புத்தாடை மற்றும் இதர பொருட்களை வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்... ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக மக்கள் அதிகளவில் வருகை தந்ததால், விற்பனை களைகட்டியது...
- திண்டுக்கல்லில் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய விக்னேஸ்வரன் என்ற ரவுடியை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்... 3 கொலை உட்பட 15 வழக்குகளில் தொடர்புடைய விக்னேஸ்வரன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது சுட்டுப்பிடித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
- ஹவாய் மாகாணத்தில் உள்ள கிலாயூயா எரிமலையில் இருந்து சிவப்பு நிறத்தில் எரிமலை குழம்புகள் ஆறாக ஓடியது... சுமார் 20 அடி உயரத்திற்கு எரிமலை குழம்புகள் கொப்பளித்து, இரவு நேர வானை சிவப்பு நிறத்தில் ஒளிர செய்தன....
- அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- மற்றவர்களை அழித்து முன்னேற முயற்சித்த நாகரிகங்கள் தொலைந்து போகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. சோமநாதர் ஆலயத்தை பாதுகாத்தவர்களை கவுரவிக்கும் விழாவில் பெசிய அவர், நம்மை பிரிக்க சதி செய்யும் அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்..
- இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்... இலங்கை அரசு கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு மாற்றம், மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்...