Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.01.2026) | 7 PM Headlines | Thanthi TV

Update: 2026-01-10 14:07 GMT
  • தமிழக அரசின் புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியாகி உள்ளது.. ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது..
  • 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்தார்... சோமநாதர் கோவிலை பாதுகாத்து உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்...
  • மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. மாநில முதலமைச்சர்கள், பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்...
  • சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்...  தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்...
  • பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகாத நிலையில், விஜய்யின் தெறி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது... ஜனவரி 15ஆம் தேதி, தெறி திரைப்படம் ரீ ரிலீஸாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்...
  • SIR பணிகள் காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்... அரசியல் பாகுபாட்டுடன் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
Tags:    

மேலும் செய்திகள்