Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-10-05 13:54 GMT
  • மாநிலம் முழுவதும் தான் பயணிக்கும்போது, தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியிருப்பதை பார்ப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்... தமிழ்நாடு யாருடன் போராடும்? என திமுகவின் வாசகத்தை குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...
  • "தமிழ்நாடு யாருடன் போராடும்?" என்ற ஆளுநரின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.. கல்வி நிதியை கொடுக்காத மத்திய அரசுக்கு எதிராக போராடும், இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும் என பதிவிட்டுள்ளார்...
  • மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.... கரூர் மக்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க தவெகவினரை விஜய் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது....
  • தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • கரூர் சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் கரூர் மக்களை சந்தித்து விட்டுதான் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்றும் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்