Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2025) | 6PM Headlines | Thanthi TV
- நாளை செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல், நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
- தேவர் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது... துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அணிவித்தனர்...
- சென்னை பல்லாவரம் வாரச்சந்தையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்... அப்போது, காலாவதியான தின்பண்டங்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது....
- கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து காட்டெருமையை சீண்டிய சுற்றுலாப்பயணி ... காட்டெருமையை துன்புறுத்தி இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
- ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மோதி வால்வோ பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.... தீக்கிரையான பேருந்தில் பயணிகள் எலும்புக்கூடாக இருந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது...