Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.12.2025) | 11 AM Headlines | ThanthiTV
- வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது... வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது... கேளம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- சென்னை, திருவள்ளூரில் தொடரும் மழையால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது... உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
- தொடர் கனமழையால் சென்னை - மதுரவாயல் சுற்றுவட்டார பகுதியில் 3 தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளது... அடையாளம் பட்டு, நொளம்பூர், கோயம்பேடு பாரிகுப்பம் தரைப்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது...
- திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது... வெள்ளத்தில் சிக்கியிருந்த 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேரை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுமூலம் மீட்டனர்...
- சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக சுமார் 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது.. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...