TNRain|"வீட்டுக்கு உள்ளேயே தண்ணி வந்துருச்சு..பாம்பு வருது.." -மிதக்கும் 200வீடுகள்..குமுறும் மக்கள்
ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கலைஞர் நகர் பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் வெளியே வர முடியாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். விஷசந்துக்கள் தொல்லை இருப்பதால், குழந்தைகளுடன் சிரமப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.