Tiruvarur | Bridge | திடீரென உள்வாங்கிய பாலம் | உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்
ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கும் மக்கள்
திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றின் குறுக்கே உள்ள இணைப்பு பாலம் திடீரென உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலங்காடு கிராமத்தில் கோறையாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாலம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய பாலத்தை அரசு விரைந்து கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.