பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - போலீசுக்கு போன் போட்டு 6 மாணவிகள் செய்த சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை கிராமமான ரெட்டியூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரெட்டியூர் அரசு மேல்நிலை பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வரும் ஆறு மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவிகள் CHILD HELP LINE ஆன "1098" என்ற எண்ணுக்கு புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஆசிரியர் பிரபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.