Thief in bus || ஒத்த உருண்டையில் மொத்ததையும் உருவிய மர்ம பெண் - ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு நடந்த அதிர்ச்சி

Update: 2025-08-09 03:37 GMT

Thief in bus || ஒத்த உருண்டையில் மொத்ததையும் உருவிய மர்ம பெண் - ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு நடந்த அதிர்ச்சி

ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சாரதா. இவர் கோவையில் உள்ள தனது மகனை பார்த்து விட்டு அரசுப்பேருந்தில் வீடு திரும்பி உள்ளார். பேருந்தானது தர்மபுரி அருகே வந்தபோது, அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் உருண்டை ஒன்றை கொடுத்ததாக தெரிகிறது. அதை சாப்பிட்ட சில நிமிடங்களில் ஆசிரியை மயங்க, அவரின் கழுத்தில் இருந்த 8 சவரன் நகை மற்றும் பணப்பையை அந்த பெண் பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, ஆசிரியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்