Theni | Viral Video | தேனி அருகே காயம் அடைந்த சிறுவனை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்
தேனி அருகே காயம் அடைந்த சிறுவனை, சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சியில் உள்ள சொக்கநிலை மலை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் என்பவரது 17 வயது மகன் தோட்டத்தில் இருந்த மரத்தில் மிளகு பறித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட பழங்குடியின மக்கள், சுமார் 5 கிலோ மீட்டர் வரை டோலி கட்டி தூக்கி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.