தெரியாத்தனமாக ஜன்னலை திறந்த பணியாட்கள்... பின் நடந்த விபரீதம்

Update: 2025-07-04 10:39 GMT

கட்டிடத்தில் கட்டப்பட்டிருந்த தேன்கூடு ஜன்னலைத் திறந்ததில் நான்கா பக்கமும் சிதறி பறந்து நிருபர்கள் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் மலை தேன்கள் கட்டி உள்ளன.

இந்த நிலையில் 6 வந்து மாடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக கட்டிடத்திலும் மலைத்தேன் கட்டி இருந்தது

அப்போது அங்கு உள்ள ஜன்னலை திறந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த தேன் கூடு கலைந்து கீழே விழுந்தது

இதன் காரணமாக மேலும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முழுவதும் தேனீக்கள் ஆக்கிரமித்தன

மேலும் தேனடைக் கீழே விழுந்ததன் காரணமாக நான்காம் பக்கமும் தேனீகள் சிதறி பறந்தன இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நிருபர்கள் மற்றும் பொதுமக்களை விரட்டி விரட்டி 10 க்கும்‌ மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது.

இதன் காரணமாக ஒரு சில திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டனர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனீக்கள் கீழே விழுந்து நிருபர்கள் மற்றும் பொதுமக்களை கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்