சாலையே சவாலாக மாறிய அவலநிலை - அவதியில் பள்ளி மாணவர்கள்

Update: 2026-01-11 07:59 GMT

பர்கூர் மலைப்பகுதியில் சாலைகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதி

பர்கூர் மலைப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கரடு முரடான சாலையில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் வீட்டை வீட்டு வெளியேற முடியாத நிலை இருப்பதாகவும், அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலையில் இருப்பதால் சாலைகள் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்