Textile | JCB | ஜவுளிக்கடை ஷட்டரை தூக்கிய JCB - குப்பென கிளம்பி பதறவிட்ட தீ ஜூவாலை
அரியலூரில் துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், பணம் மற்றும் துணிகள் எரிந்து நாசமகின. 6தேரடியில் உள்ள சண்முகம் என்பவரது துணிக் கடையில் இரவில் தீப்பற்றிய நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ஜேசிபி உதவியுடன் துணிக்கடையின் இரும்பு கதவை உடைத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து சேதமாகின. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.