Tamilnadu | SIR - நாளையே கடைசி நாள்

Update: 2025-12-10 09:02 GMT

தமிழகத்தில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய எஸ்.ஐ.ஆர். பணி, டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வீடுவீடாக நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில், விநியோகிக்கப்பட்ட 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்களில், 6 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரத்து 877 படிவங்கள், அதாவது 99.55 சதவீத படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதைத்தொடர்ந்து வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால், ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறும் முகாமில் பெயர் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து, பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்