virudhunagar | பள்ளிக்கு 5 கி.மீ. சுற்றி சென்ற மாணவர்கள் - சாலை மறியல் குதித்த பெற்றோர்
விருதுநகர் மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் சாலை மறியல் செய்தனர். இந்த சுரங்கப்பாதையில் நான்கு அடி உயரம் வரை தண்ணீர் இருந்ததால் தங்களது பிள்ளைகள் சுமார் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி சென்று பள்ளிக்கு சென்றனர் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.