கொங்கு மண்டலத்தில் சத்தமின்றி திடீர் ரெய்டு - கட்டு கட்டாக சிக்கிய பணம்

Update: 2025-05-01 07:15 GMT

சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.53 லட்சம் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

நஞ்சியம்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 6 மணி நேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுக்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், அலுவலக உதவியாளர் ஒருவரிடம் இருந்து 3 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்