வெறிநாய்கள் கடித்து 7 வெள்ளாடுகள் பலி

x

கள்ளக்குறிச்சி அருகே வெறிநாய்கள் கடித்ததில் 7 வெள்ளாடுகள் பலியாகின. வரதப்பனூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர், தனது விளைநிலத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 வெறிநாய்கள் கழுத்தில் கடித்ததில் ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இறந்து கிடந்த ஆடுகளை கண்டு உரிமையாளர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.


Next Story

மேலும் செய்திகள்