விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதியில் இருந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.