அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றும் டெக்னீசியன் ராஜு, துப்புரவு பணியாளரான உமாவை காலணியால் தாக்கியதற்கு சக பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காயமடைந்த துப்புரவு பணியாளர் உமா சக பணியாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பாக மருத்துவ அலுவலர் விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்ட ராஜுவை, 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.