மாற்றுத்திறனாளி மகளை தூக்கி வந்து கைகொடுத்து வாழ்த்து சொல்லி தேர்வெழுத வைத்த தாய் -நெகிழ்ச்சி வீடியோ
ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளி மகளை, தூக்கிக் கொண்டு வந்த அவரது தாயார், பிளஸ் 2 தேர்வு எழுத வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி சர்மிளாவை, அவரது தாயார், பொதுத்தேர்வு எழுதுவதற்காக தூக்கிக் கொண்டு வந்ததுடன், தேர்வு அறையில் அவரது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து சொல்லிவிட்டு சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.