Pudukottai | கடலில் மாயமான மீனவர்கள் மீட்பு - நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள்

Update: 2026-01-11 12:38 GMT

Pudukottai | கடலில் மாயமான மீனவர்கள் மீட்பு - நிம்மதி பெருமூச்சு விட்ட கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது..நாட்டு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் திருமூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி, படகில் டீசல் தீர்ந்ததால் கரைக்கு திரும்ப முடியாமல் கடலுக்குள் பரிதவித்தனர். தகவல் கிடைத்ததும், தமிழக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர், சக மீனவர்களின் உதவியுடன் சென்று 4 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை கடலோர பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்