புதுச்சேரியில் போக்சோ வழக்கு தொடர்பாக அவதூறு செய்திகளை வெளியிட்ட யூடியூபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி தானாம்பாளையத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தை திசைதிருப்பும் விதமாக, மீனவ சமுதாய மக்களை இழிவு படுத்தும் வகையில், சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற யூடியூபர் அவதூறு செய்திகளை பரப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசாருடன் சேர்ந்து, யூடியூபர் கார்த்திக்கை தவளகுப்பம் போலீசார் கைது செய்தனர்.