புதுச்சேரியில் பிரபல உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், வானுார் துருவைக் கிராமத்தை சேர்ந்த குரு என்பவர், புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், உணவுப்பாதுகாப்புத் துறையினர் விசாரணை வருகின்றனர். பிரியாணியில் புழுக்கள் இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.